கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு: இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் முற்றுகை

கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு: இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் முற்றுகை
கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு: இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் முற்றுகை

குடியாத்தம் அருகே கிணற்றில் இருந்து வாலிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா காவல் துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் வாலிபரின் உடல் மீட்கபட்டு விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்பு அவர் குடியாத்தம் அடுத்த செண்டத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதான நவீன்குமார் என்பதும் அவர் ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய வருவதும் தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் குவிந்த நவீன்குமாரின் உறவினர்கள் உடலை எடுத்துச் செல்ல விடாமல் காவல் துறையினரை முற்றுகையிட்டு, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குடியாத்தம் - மாதனூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் உறவினர்களிடம் காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com