மதுரை: சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிணற்றில் இருந்து இளம்பெண் சடலமாக மீட்பு!

மதுரை அருகே கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் சடலம்
பெண் சடலம் PT WEB

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மதுரை டு திண்டுக்கல் செல்லும் நான்கு வழிச்சாலை உள்ளது. இங்கு திருவாலவாயநல்லூர்பிரிவு அருகே உள்ள தனியார் கிணற்றில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மிதந்துள்ளது. இதனைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் சடலம்
ஹரியானா | 6 குழந்தைகளின் உயிரை பறித்த பள்ளிபேருந்து... ஓட்டுநர் மது அருந்தியது அம்பலம்; 3 பேர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com