சேலம்: சூட்கேஸில் அடைத்து வீசப்பட்ட இளம்பெண்ணின் சடலம்; மலைப்பாதையில் நடந்த மர்ம சம்பவம்!

ஏற்காடு மலைப் பாதையில் சூட்கேஸில் அடைத்து வீசப்பட்டிருந்த இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்
சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்PT WEB

சேலம் மாவட்டம், சுற்றுலாத்தலமான ஏற்காடு மலைப்பாதையில் வனத்துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 40 அடி பாலத்தின் அருகே கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த வனத்துறையினர் மலைப்பாதை ஒட்டிய பள்ளத்தைப் பார்த்த போது சுமார் 10 அடி ஆழத்தில் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது தெரியவந்தது.

சேலம் - சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்
சேலம் - சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

இது குறித்து வனத்துறையினர், ஏற்காடு காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேஸை திறந்து பார்த்தபோது, உள்ளே சுமார் 30 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது.

சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்
விருதுநகர் | சொத்து பிரச்னையில் தந்தையையே கொன்ற கொடூர மகன்.. தலைமறைவான 2 மணி நேரத்தில் ட்விஸ்ட்!

இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் பதிவு செய்யப்பட்டன. சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் அரசு மருத்துவமனை
சேலம் அரசு மருத்துவமனை

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சூட்கேஸில் பெண்ணின் சடலத்தை அடைத்து வீசி சென்றவர் யார்? இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூட்கேஸில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்
ஈரோடு : இளம்பெண்களிடம் ரூ.5 லட்சம் திருடிய தம்பதி... பாதிக்கப்பட்ட பெண்கள் வைத்த செக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com