\
மேற்கூரை இடிந்ததில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மேற்கூரை இடிந்ததில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

மேற்கூரை இடிந்ததில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
Published on

பொறையார் போக்குவரத்து பணிமனை மேற்கூரை இடிந்ததில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நாகை மாவட்டம் பொறையாரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இரவு தாமதமாக பணி முடித்தவர்கள் மற்றும் அதிகாலைப் பணிக்குச் செல்வோர் என பதினோரு பேர் பணிமனையில் நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை சுமார் மூன்று மணியளவில் மேற்கூரை இடிந்து விழந்தது. இதில் சிக்கிய ஊழியர்கள் மரண ஓலமிட்டனர். ஆனால், அதிகாலை நேரம் என்பதால் உதவிக்கு வர யாருமில்லை. 

தகவலறிந்து சிறிது நேரம் கழித்து வந்த தீயணைப்புப் படையினர், போக்குவரத்துத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். அவர்களால் மூன்று பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com