ஏழை மாணவர்களின் படிப்புக்கு வெப்சைட் உருவாக்கி உதவும் கமிஷனரின் மகள்கள்!

ஏழை மாணவர்களின் படிப்புக்கு வெப்சைட் உருவாக்கி உதவும் கமிஷனரின் மகள்கள்!
ஏழை மாணவர்களின் படிப்புக்கு வெப்சைட் உருவாக்கி உதவும் கமிஷனரின் மகள்கள்!

ஆன்லைன் வகுப்புக்கு தேவைப்படும் ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற உபகரணங்கள் வாங்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் மகள்கள் உதவி செய்து வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையில் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். தற்போது கொரோனோவால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வருகின்றன. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் பலர் ஆன்லைன் வகுப்புக்கு ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் மகள்கள் குனிஷா அகர்வால், அர்ஷிதா ஆகியோர் ஏழை மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் உதவி வருகின்றனர். வெப்சைட் உருவாக்கி அதன் மூலம் ஆன்லைன் வகுப்புகளுக்கு உபகரணங்கள் இல்லாத ஏழை மாணவர்களுக்கு டேப், லேப்டாப் வழங்கி உதவி வருகின்றனர்.

இதுகுறித்து குனிஷா அகர்வால் கூறுகையில், “எங்கள் வீட்டில் பணியாளாக வேலை செய்து வரும் பெண்ணின் மகள் ஆன்லைன் வகுப்புக்கு உரிய உபகரணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அவருக்கு எனது தாய் வினிதா அகர்வால் லேப்டாப் கொடுத்து உதவினார். இதைப்பார்த்து நானும் உதவ வேண்டும் என முன் வந்தேன்.

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து என்ஜிஓ ஒன்றின் உதவியுடன் ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான 100 உபகரணங்களை சேகரித்து, ஏழை மாணவர்களுக்கு உதவியுள்ளோம். சென்னை ரோட்டரி கிளப்புடன் இணைந்து இதனை செய்து வருகிறோம். இதற்காக பாலசுப்பிரமணியம் என்ற தொழில்நுட்ப வல்லுநர் மூலம் www.helpchennai.org என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு லேப்டாப் மற்றும் செல்போன் தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய உபகரணங்கள் மட்டும் அல்லாமல், நண்பர்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட லேப்டாப், மொபைல் போன்களை சரி செய்து மாணவர்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறோம்.

இதில் ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவ விரும்புபவர்களும், உபகரணங்கள் தேவைப்படும் மாணவர்களும் இதில் பதிவு செய்யலாம். உபகரணங்கள் தேவையுள்ள மாணவர்கள், பெற்றோர் வருமான சான்று, பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com