“அவதூறு பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்” - டத்தோ மாலிக் வீடியோ வெளியிட்டு ஆவேசம்

“ஜாபர் சாதிக்கின் 'பாஸ்' நானா? ஜாபர் சாதிக்கை நான் பார்த்ததும் இல்லை பேசியதும் இல்லை” - மலேசிய தொழிலதிபர் 'டத்தோ மாலிக்' பரபரப்பு வீடியோ.
டத்தோ மாலிக், ஜாபர் சாதிக்
டத்தோ மாலிக், ஜாபர் சாதிக்புதிய தலைமுறை

செய்தியாளர் : ஜெ.அன்பரசன்

டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்துஅதனை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இதனை செய்த கடத்தல் கும்பல்காரர்களான முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்து 2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. அப்போது அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், அப்போதைய திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர்தான் இந்த கடத்துலுக்கு காரணம் என்பது தெரியவந்தது.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு மட்டுமல்லாமல் மலேசிய நாட்டிற்கும் போதைப் பொருட்களை கடத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்று தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்போதைக்கு இவரது கூட்டாளியான சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் 'பாஸ்' மலேசியாவைச் சேர்ந்த 'டத்தோ மாலிக்' என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவின.

டத்தோ மாலிக், ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் குடோனில் NCB அதிகாரிகள் சோதனை!

வீடியோ வெளியிட்டு டத்தோ மாலிக் விளக்கம்!

இதையடுத்து மலேசியாவைச் சேர்ந்த டத்தோ மாலிக், ஜாபர் சாதிக்குடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான சமூக வலைதள கருத்துக்கு மறுப்பு தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “ஜாபர் சாதிக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை பெரிய டான் என்றும் கேங்ஸ்டர் என்றும் சொல்கின்றனர். ஆனால் எதுவும் உண்மையில்லை. ஜாபர் சாதிக்கிடம் நான் பேசியதே இல்லை. நேரில் அவரை பார்த்ததுக் கூட இல்லை. இது முழுக்க முழுக்க பொய். நான் ஒரு சினிமா துறையை சார்ந்த தொழிலதிபர் என்பதால் தொழில் போட்டி காரணமாக மலேசியாவிலும் இந்தியாவிலும் என் மீது அவதூறை பரப்பி வருகின்றனர்.

மலேசிய காவல்துறையில் இதுதொடர்பாக நான் புகார் அளித்துள்ளேன். இந்தியாவிலும் எனது வழக்கறிஞர்கள் மூலம் அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்” என்றுள்ளார் டத்தோ மாலிக்.

யார் இந்த டத்தோ மாலிக்? பிண்ணனி என்ன?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் மீம்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் தஸ்கீர் (40). இவர் மலேசியாவில் ஜவுளி கடை ஊழியராக வாழ்க்கையை துவங்கினார். தொடர்ந்து அப்துல் மாலிக், மாலிக் குழுமத்தை உருவாக்கினார்.

திரைப்பட விநியோகம், தயாரிப்பு என தன் தொழிலை விரிவுப்படுத்தி அதன் பின் தங்கம், வைர நகை வியாபாரத்திலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

டத்தோ மாலிக்
டத்தோ மாலிக்Instagram | @datoabdulmalik

திரைப்பட விநியோகம் செய்து வருவதால் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. மலேசியாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்களை அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

ரஜினி நடித்த 'கபாலி' படத்தை மலாய் மொழியில் தயாரித்து, வினியோகம் செய்ததால் மேலும் இவர் பிரபலமானார். கடந்த 2023 ம் ஆண்டு ஜூலை மாதம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் ரகசிய இயக்கங்களுக்கு நிதியுதவி செய்ததாக கூறி டத்தோ மாலிக்கை மலேசிய போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com