வெளியான Dating cafe போஸ்டர்... களத்தில் இறங்கிய காவல்துறை!

கோவை சரவணம்பட்டி பகுதியில் dating cafe திறக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
dating cafe
dating cafeஇன்ஸ்டாகிராம்

மும்பை, டெல்லி போன்ற பெருநகரகங்களில் dating cafe-க்கள் அதிகம் செயல்படுகின்றன. அவை அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெறுகின்றன.

இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் dating cafe என்ற பெயரில் கடை அமைந்துள்ளதாக சமூகவலைதளங்களில் வீடியோக்களுடன் தகவல்கள் வெளியாகின. இப்பகுதி அதிக அளவில் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் இயங்கி வரும் இடமாக பார்க்கப்படுகிறது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

அந்தவகையில் மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனம்தான் சரவணம்பட்டி பகுதியிலும் இந்த கபே-க்களை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்காக சமூக வலைதளங்களில் அந்நிறுவனம் விளம்பரம் செய்ததாக தகவல் வெளியாகினது.

dating cafe
4 வயது மகனை கொலை செய்த ஸ்டார்ட் அப் நிறுவன CEO; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்-யார் இந்த சுச்சனா செத்?

அந்த விளம்பரத்தை பார்த்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை செய்ததில், அந்த நிறுவனம் இதுபோன்ற விளம்பரத்தை வெளியிடவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விளம்பரத்தினை வேறு ஏதோ பெண்தான் பகிர்ந்தாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில் “இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் யார் தகவலை பரப்பினார்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தற்போதைக்கு இதுபோன்ற எந்த ஒரு கடையும் கோவையில் தொடங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

dating cafe
“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்”-பில்கீஸ் பானு வழக்கின் தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com