திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு!

திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு ஜனவரி. 21 ல் நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக இளைஞரணி மாநாடு
திமுக இளைஞரணி மாநாடு ட்விட்டர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு கடந்த மாதம் நடைபெறவிருந்தது. அம்மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

ஆனால் கடந்த மாதம் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை ஆகியவற்றின் காரணமாக அது அடுத்தடுத்து (டிசம்பர் 17, 27) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு ஜனவரி 21 ல் சேலத்தில் நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

திமுக இளைஞரணி மாநாடு
கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்

அதில், “மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2-வது திமுக இளைஞர் அணியின் மாநாடு ஜனவரி 21 ல் சேலத்தில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த மாநாடு திமுக-விற்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com