தமிழக மக்கள் இலவசங்கள், மதுவால் சோம்பேறிகளாக உள்ளனர்: நீதிபதி கிருபாகரன் கருத்து

தமிழக மக்கள் இலவசங்கள், மதுவால் சோம்பேறிகளாக உள்ளனர்: நீதிபதி கிருபாகரன் கருத்து
தமிழக மக்கள் இலவசங்கள், மதுவால் சோம்பேறிகளாக உள்ளனர்: நீதிபதி கிருபாகரன் கருத்து

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் இலவசங்கள் மற்றும் மதுவால் சோம்பறிகளாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

கடந்த மே 16 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் சங்கர நாரயணன் வழக்கு குறித்தான விவரங்களை சமர்பிக்க கூடுதலாக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் எனக் கூறினார்.

அப்போது பேசிய நீதிபதி “மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு மற்றும் வேலை இழப்பு குறித்த விவரங்கள் இல்லை எனக் கூறியுள்ளது. மத்திய அரசு எப்படி அவ்வகையான கருத்தை முன்வைக்கலாம், மாநில அரசுகளிடம் இருந்து தகவல்களைப் பெற்று கூறியிருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து பேசிய வழக்கறிஞர், “அண்மையில் வெளிவந்த தகவலின் படி, தமிழ்நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களில் 52 சதவிகிதத்தினர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் மேற்கு வங்கத்தில் இருந்து ஏராளமான பெண்கள் தஞ்சாவூர் பகுதிகளில், விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

இதனைதொடர்ந்து பேசிய நீதிபதி, “தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் மது மற்றும் இலவசங்களால் சோம்பேறிகளாக உள்ளனர்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com