தமிழ்நாடு
பாம்பன் பாலத்தின் மீது ஆபத்தான முறையில் செல்ஃபி: அசம்பாவிதம் நேராமல் தடுக்க கோரிக்கை
பாம்பன் பாலத்தின் மீது ஆபத்தான முறையில் செல்ஃபி: அசம்பாவிதம் நேராமல் தடுக்க கோரிக்கை
புகழ்பெற்ற பாம்பன் பாலத்தில் உயிருக்கு ஆபத்தான வகையில் செஃபி எடுத்துக் கொள்வோரை காவல் துறையினர் தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்துக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள், விதிகளை மீறி பாம்பன் பாலத்திலேயே வாகனத்தை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சிலர் ஆபத்தை உணராமல் செல்ஃபி மோகத்தில் வாகனத்தின் மேலே ஏறி செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். இதுபோன்ற விபரீதங்களை தடுக்க, காவல் துறையினர் பாம்பன் பாலத்தில் ரோந்து செல்ல வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.