அனுமதியின்றி விடுதியில் ஆட்டம்போட்ட பெண்கள் கைது

அனுமதியின்றி விடுதியில் ஆட்டம்போட்ட பெண்கள் கைது
அனுமதியின்றி விடுதியில் ஆட்டம்போட்ட பெண்கள் கைது

சென்னையில் அனுமதியின்றி விடுதியில்‌ நடனமாடிய 8 பெண்கள் உள்பட இரண்டு விடுதி மேற்பார்வையாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

புரசைவாக்கத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் அனுமதியின்றி பெண்கள் நடனமாடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவ‌ல்துறையினர் நடனமாடிக் கொண்டிருந்த 8 பெண்கள் மற்றும் 2 மேற்பார்வையாளர்களையும் கைது செய்ததோடு, அங்கிருந்த 40 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை தலைமைச் செயலக காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு, 8 பெண்களை மட்டும் பிணையில் விடுவித்தனர். இதனிடையே, தலைமறைவாகியுள்ள விடுதி உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com