\
தமிழகத்தில் 19000ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு - 113 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

தமிழகத்தில் 19000ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு - 113 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

தமிழகத்தில் 19000ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு - 113 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு
Published on: 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று 1,43,571 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 18,665,வெளிமாநிலங்களில் இருந்துவந்த 27 பேர் என 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 5,473 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,15,128ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 16,007 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 10,37,582 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக ஒரேநாளில் 113 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,046ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 61 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 52 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் ஒரேநாளில் 42 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இணை நோய்கள் இல்லாமல் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com