தமிழகத்தில் 6,200-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 6,200-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 6,200-க்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு
Published on

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,524-இல் இருந்து 6,120ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

1,23,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,120ஆக உள்ளது. சென்னையில் நேற்று 1,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் பாதிப்பு 972 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் மேலும் 26 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,759 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,38,878இல் இருந்து 1,21,828ஆக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 23,144பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 32,51,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 1,020ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 911ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டில் 691 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 531ஆக குறைந்துள்ளது. அதேபோல் திருப்பூரில் 609ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 473ஆக குறைந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com