\
தமிழகத்தில் 4000க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 4000க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 4000க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு
Published on

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4000க்கும் கீழ் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 44ஆவது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1,57,791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் 3,865 பேர், வெளிமாநிலங்களில் இருந்துவந்த 2 பேர் என 3,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் 72 பேர் இறந்த நிலையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,005ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 54 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 35,294ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 4,382 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,27,988பேர் டிஸ்சர்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com