தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25000ஐ நெருங்கியுள்ளது.
1,52,130 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 24,871, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 27 பேர் என ஒரேநாளில் 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட 810 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் மேலும் 195 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 114 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 45 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் ஏற்கெனவே 6,291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 6,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,31,498ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 21,546 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 11,51,058 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.