\
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
Published on: 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12000-ஐ கடந்துள்ளது.

இன்று 1,15,653 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரேநாளில் தமிழகத்தில் 12,616, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 36 பேர் என 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று 3750 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,789 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக மேலும் 59 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,317ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 39 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 89,428ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 7,526 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 9,34,966 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com