\
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி
Published on

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா கம்லேஷ் தஹில் ரமானி பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தஹில் ரமானிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு புதிய தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் 3வது பெண் தலைமை நீதிபதி தஹில் ரமானி ஆவர்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான தஹில் ரமாணி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழ்க்கை குறிப்பு:

1958ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தஹில் ரமாணி பிறந்தார். 1982ஆம் ஆண்டு ஜூலையில் மும்பை மற்றும் கோவா பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டார். கீழ் நீதிமன்றங்களிலும் பின்னர் உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார். தந்தையுடன் சேர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்த தஹில்ரமாணி, பல கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். பின்னர் அவர் மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். 1987ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டுவரை பகுதி நேர பேராசிரியராக சட்டக் கல்லூரி ஒன்றில் பணியாற்றியுள்ளார். 

1990ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட அவர், பல வழக்குகளில் வெற்றி தேடித்தந்தார். 2001ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில்ரமாணி, பின்னர் அந்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உயர்ந்தார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் என்ற பெருமையையும் தஹில்ரமாணி பெற்றுள்ளார்,.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com