'அப்பா நகை, பணத்தை வாங்கிவரச் சொன்னாரு' - சிறுவர்களிடம் நூதன முறையில் கொள்ளை

'அப்பா நகை, பணத்தை வாங்கிவரச் சொன்னாரு' - சிறுவர்களிடம் நூதன முறையில் கொள்ளை
'அப்பா நகை, பணத்தை வாங்கிவரச் சொன்னாரு' - சிறுவர்களிடம் நூதன முறையில் கொள்ளை

திருவள்ளூரில் நகை மற்றும் பணத்தை தந்தை வாங்கி வர சொன்னதாகக் கூறி, சிறுவர்களை ஏமாற்றி 8 சவரன் நகை, ரூ. 25,000 பணம் ஆகியவற்றை நூதனமான முறையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கொத்தனார் லட்சுமணன். இவர், காலையில் கட்டட பணிக்கு சென்று விட்ட நிலையில், இவரது மனைவியும் 100 நாள் வேலைக்கு சென்றாக கூறப்படுகிறது. இவர்களது மகன்கள் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் மர்ம நபர்கள் இருவர் வீட்டிற்கு வந்து பீரோவில் உள்ள நகைகளையும், பணத்தையும் தந்தை லட்சுமணன் வாங்கி வர சொன்னதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சிறுவர்கள் பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள், ரூ. 25,000 ரொக்க பணத்தை மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளனர். 100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய லட்சுமணனின் மனைவி அங்கம்மாளுக்கு, மர்ம நபர்கள் குழந்தைகளை ஏமாற்றி நகை, பணத்தை நூதன முறையில் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆரணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com