மகளை வன்கொடுமை செய்ய முயன்றதாக தந்தை கைது 

மகளை வன்கொடுமை செய்ய முயன்றதாக தந்தை கைது 
மகளை வன்கொடுமை செய்ய முயன்றதாக தந்தை கைது 

கடலூரில் பெற்ற மகளை தந்தையே வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பெண் ஒருவர், தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ‌சவூதியில் வேலைபார்த்து வந்த பெண்ணின் தந்தை முகமது அலி என்பவர் கடந்த 2 ஆம் தேதி இந்தியாவுக்கு திரும்பினார். 

இந்நிலையில், வீட்டிலிருந்த மகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், தனது ஆசைக்கு இணங்கும்படியும் முகமது அலி வற்புறுத்தியதாக தெரிகிறது. மகள் என்றும் பாராமல் தூங்கிக் கொண்டிருந்த போது, முகமது அலி தவறாக நடக்க முயன்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாயார் தட்டிக் கேட்ட போது, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மகள் கொடுத்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்துறையினர் முகமது அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com