“பள்ளி மாணவருடன் தவறான உறவில் இருக்கிறார் 55 வயது ஆசிரியை” - நீதிமன்றத்தில் தந்தை மனு

“பள்ளி மாணவருடன் தவறான உறவில் இருக்கிறார் 55 வயது ஆசிரியை” - நீதிமன்றத்தில் தந்தை மனு
“பள்ளி மாணவருடன் தவறான உறவில் இருக்கிறார் 55 வயது ஆசிரியை” - நீதிமன்றத்தில் தந்தை மனு

மகனை தவறான பாதைக்கு அழைத்ததாக ஆசிரியை ரேவதி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் தந்தை தொடர்ந்த வழக்கை நவம்பர் 26ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. 

புதுக்கோட்டையைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," எனது மகன் தனியார் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியின் முதல்வர் ரேவதி (வயது 55) எனது வீட்டிற்கு அருகில் உள்ளதால், எங்கள் குடும்பத்தினரிடம் நல்ல உறவு நிலையில் இருந்தார். இதன் காரணமாக எனது மகனை அவரிடம் டியூஷனுக்கு அனுப்பினேன். 

இந்நிலையில், எனது மகனுக்கும், அந்த ஆசிரியைக்கும் தவறான உறவு இருப்பதாக அருகிலிருந்தவர்கள் கூறவே, மகனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் நாங்களும் அதனை உறுதி செய்தோம். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்த நிலையில் அந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு சென்று விட்டார். 

இருப்பினும், சமூக வலைதள செயலி ஒன்றின் மூலமாக இருவரும் தொடர்பில் உள்ளனர். அந்த செயலில் அவர்கள் பரிமாறிக்கொண்ட தகவல் கிடைக்கப்பெற்றன. அதில், எனது மகன் என்னைக் கொலை செய்யும் மனநிலையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து எனது மகனுக்கு மன ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு, எனது மகனின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

ஆகவே எனது மகனை தவறான பாதைக்கு அழைத்து எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான ஆசிரியை ரேவதி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்"  என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மாணவனை நவம்பர் 26ல் நீதிபதி அறையில் நேரில் ஆஜர்படுத்த தந்தைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com