\
பெற்ற மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை

பெற்ற மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை

பெற்ற மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை
Published on

சென்னையில், மதுபோதையில் இரண்டரை மாத குழந்தையை அடித்துக் கொலை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கே.கே.நகரில், ஆறுமுகம் - துர்கா தம்பதி வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த துர்கா, எல்லப்பன் என்பவரைத் 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்றிரவு மதுபோதையில் இருந்த எல்லப்பன், துர்காவுடன் சண்டையிட்டுள்ளார். திடீரென ஆத்திரமடைந்த அவர், அருகே அழுது கொண்டிருந்த குழந்தையின் தலையில் ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது. 

காதுகளில் ரத்தம் வழிந்ததால் அலறித்துடித்த அந்த குழந்தை, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுதொடர்பாக எல்லப்பனை கைது செய்துள்ள காவல்துறையினர், கொலையை மறைக்க துர்கா உடந்தையாக இருந்தாரா என விசாரணை நடத்தி வருகிறனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com