சசிகலா பக்கத்து அறையில் இருந்த சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்

சசிகலா பக்கத்து அறையில் இருந்த சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்
சசிகலா பக்கத்து அறையில் இருந்த சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்

பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையில் இருந்த சயனைடு மல்லிகா என்ற கொலை குற்றவாளி வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அடைக்கப்பட்டார். இவருடன் இளவரசி, சுதாகரனும் அதே சிறையில் உள்ளனர்.

சசிகலாவின் பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா என்ற கொலை குற்றவாளி இருந்தார். மல்லிகா வசதி வாய்ந்த பெண்களுடன் பழகி அவர்களுக்கு சயனைடு கலந்த உணவை கொடுத்து நகைகளை கொள்ளை அடிப்பவர். 2008-ல் பிடிபட்ட இவர் ஆறு கொலைகள் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்.

சசிகலாவின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த வாரங்களில் செய்தி வெளியானது. இதனால் சயனைடு மல்லிகாவும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். சசிகலாவின் உயிருக்கு ஆபத்து என்று கூறி தமிழக சிறைக்கு மாற்ற முயற்சிகள் நடந்து வரும் நிலையில், கர்நாடக சிறை அதிகாரிகள் சயனைடு மல்லிகாவை பெலகவியில் உள்ள ஹிண்டல்கா சிறைக்கு மாற்றியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com