கும்பகோணம்
கும்பகோணம்புதிய தலைமுறை

வெடித்த சிலிண்டர்.. அலறி ஓடிய மக்கள்.. கும்பகோணத்தில் பரபரப்பு!

கும்பகோணத்தில் உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சி வெளியாகியுள்ளது. மடத்து தெருவில் உள்ள உணவகத்தில் திடீரென தீப்பிடித்ததால் ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர்.
Published on

கும்பகோணத்தில் உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சி வெளியாகியுள்ளது. மடத்து தெருவில் உள்ள உணவகத்தில் திடீரென தீப்பிடித்ததால் ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர்.

சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அந்த இடமே பதற்றமாக காட்சியளித்தது. தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட, தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது.

கும்பகோணம்
“என்ன சொல்லிவிட்டேன்.. நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்..” வீடியோ வெளியிட்டு மகா விஷ்ணு விளக்கம்

முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளிக்க, விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். நிகழ்விடத்திற்கு சென்ற எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சீர்ப்படுத்தினார். இந்நிலையில், தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com