தமிழ்நாடு
‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு
‘ஒகி’ புயலால் குமரி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக் காற்று வீசி, மரம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியுள்ளது. புயலின் காரணமாக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஓகி புயலுக்கு மரம் விழுந்ததில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாகர்கோவிலில் மரம் விழுந்து 2 பேரும் மலையடி என்ற இடத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புயலின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.