\
நெருங்கும் புயல் - மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

நெருங்கும் புயல் - மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

நெருங்கும் புயல் - மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
Published on

‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரக் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்புகொள்ள வேண்டிய எண்களானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயலானது நாளை மாலை அல்லது இரவு காரைக்கால் மாமல்லபுரம் அருகே கரையைக்கடக்கிறது. இதனால் சென்னை உட்பட பல இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது.

நாளை அதிதீவிரபுயலாக வலுபெறும் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறன. அதன் ஒரு பகுதியாக மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் வண்ணம் அவசரகாலத்தில் அவர்கள் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைப்பேசி எண்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழங்கியுள்ளது.

அவை கீழ்கண்டவாறு

நிவர் புயல் மாற்றுத்திறனாளிகளுக்கு அவசரகால உதவி அழைப்பு எண் - 18004250111

செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு எண் - 9700799993.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com