பெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

'நிவர்’ புயல் காரணமாக கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

‘நிவர்’ புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து, 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘நிவர்’ புயல் நெருங்கி வரும் நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 10ம்  எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ஆம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது.

சென்னை என்ணூர் துறைமுகத்தில் 9ம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 9-ஆம் எண் கூண்டுக்கு, புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். 

நாகை மற்றும் காரைக்காலிலும் 8ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம். 

நிவர் புயல் காரணமாக பொதுமக்கள், மீனவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com