வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழைPT

வங்கக்கடலில் 3 நாட்களில் உருவாகும் புயல்.. 5% அதிகரித்த வடகிழக்கு பருவமழை!

வங்கக்கடலில் மூன்று நாட்களில் புயல் உருவாகவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Published on

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வு பகுதி, வரும் 26ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலைமையம் முன்பு தெரிவித்திருந்தது..

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியகாற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதியாகவலுப்பெற்றதாகவும், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், அது மேலும் அதே திசையில் நகர்ந்து, புயலாக உருவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கை

இந்தசூழலில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல்
உருவாக வாய்ப்புள்ளதாக, வானிலை
ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இயல்பை விட 5% அதிகமான வடகிழக்கு பருவமழை..

வங்கக்கடலில் 3 நாட்களில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார்..

hindi language added to tamil nadu weather office
அமுதாபுதிய தலைமுறை

அப்போது பேசிய அவர், இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் காணப்படுவதாகவும், இதனால் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5 விழுக்காடு அதிகம் பதிவாகி உள்ளதாகவும் அமுதா குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com