புயல்
புயல்எக்ஸ் தளம்

ஒருவழியாக உருவானது ”ஃபெஞ்சல்” புயல் .. இன்றிரவு 7 மணிக்கு செம்ம மழை இருக்கு.. இனிமேதான் ஆட்டம்!

வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறாது எனவும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையைக் கடக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. பின்னர், அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாக இருப்பதாகவும், அது, தற்போது சென்னையில் இருந்து 380 கி.மீ., நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது.

புயல்
புயல்pt web

இந்தநிலையில், வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் என்று அழைக்கப்பட்டதன் புதிய வார்த்தை உச்சரிப்புதான் ஃபெஞ்சல்.. மற்றபடி இது அதேபெயர் தான் என்று கூறப்படுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்த புயல் சின்னம், இன்று 2.30 மணிக்கு புயலாக உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை பிற்பகல் ஒரு மணிக்கு மாலை 5 மணிக்குள் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம் மகாபலிபுரம் அருகே கரையை கடக்க தொடங்கும்..

இன்று இரவு 7:00 மணி முதல் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் புதுவை மாவட்டங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரித்து இன்று இரவு 9 மணி முதல் நாளை இரவு 7 மணிக்குள் பரவலாக மிக கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்புள்ளது.

வடகடலோர மாவட்டங்கள் ஆன சென்னை முதல் கடலூர் வரை தரைக்காற்றின் வேகம் இன்று இரவு முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச தொடங்கும் புயல் கரையை கடக்கும் போது 80 முதல் 90 km வேகத்தில் சூறைக்காற்று வீசவாய்ப்புள்ளது.

இதுகுறித்து முழுத் தகவலையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.

புயல்
சென்னையை நெருங்கி வரும் புயல்? நொடிக்கு நொடி அதிதீவிர காற்று..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com