தாழ்வு மண்டலம்
தாழ்வு மண்டலம்PT Desk

அடுத்த 3 மணி நேரத்தில் உருவாகிறது Fengal... புயலாகவே கரையை கடக்கும்...!

வங்கக்கடலில் புயல் உருவாகும் என்று மீண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் புயல் உருவாகும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், எங்கெல்லாம் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்பது பற்றி இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
Published on

வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, “தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக் கடலில் FENGAL புயல் உருவாகிறது. தற்போது சென்னையில் இருந்து 380 கி.மீ., நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அங்கிருந்து 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது தாழ்வு மண்டலம். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ.30) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது.

புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரவு 7 மணி முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com