\
வீட்டிற்குள் நுழைந்து நாசூக்காக சைக்கிள் திருடிய நபர் - சிசிடிவி அம்பலம்

வீட்டிற்குள் நுழைந்து நாசூக்காக சைக்கிள் திருடிய நபர் - சிசிடிவி அம்பலம்

வீட்டிற்குள் நுழைந்து நாசூக்காக சைக்கிள் திருடிய நபர் - சிசிடிவி அம்பலம்
Published on: 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, பட்டப்பகலில் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சைக்கிள் திருடும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கரட்டூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள், கடந்த 24-ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து யுவராஜ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்ததில், காலை 9.30 மணியளவில் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு, மீண்டும் கேட்டை முன்பு இருந்ததுபோல் மூடிவிட்டு சென்றது தெரிந்தது.

இந்தக் காட்சிகளைக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த உரிமையாளர், வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து சைக்கிள் திருடனை தேடி வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com