\
பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
Published on

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை தகவல் பதிவு செய்துள்ளனர்.

'மதனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருக்கும் எல்லோருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாச வார்த்தைகளை பேசி சமூக வலைதளத்தில் பரப்பி வருபவர்களை கண்காணித்து வருகிறோம்.

எல்லோருடைய மெசேஜையும் படித்து வருகிறோம். தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி விளையாடுபவர்களை கண்டறிந்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க உள்ளோம். தடையை மீறி விளையாடுபவர்களின் இல்ல முகவரிக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.

எல்லோரையும் கண்காணித்து வருகிறோம். கவனமாக இருங்கள். மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்' என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவுசெய்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் STATUS-ல் இந்த எச்சரிக்கையை வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com