வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாய் பணம் திருட்டு... தயாநிதி மாறன் புகார்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கிக் கணக்கில் இருந்து ரூ, 99,999 பணத்தை சாதுர்யமாக கும்பல் ஒன்று திருடியுள்ளது
தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்ஃபேஸ்புக்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கிக் கணக்கில் இருந்து ரூ, 99,999 பணம் திருடு போயிருக்கிறது . இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தயாநிதிமாறன் புகார் அளித்துள்ளார்.

புகார் மனு
புகார் மனுPT

மலேசியாவில் இருக்கும் தயாநிதி மாறனின் மனைவியின் செல்போனுக்கு கடந்த 8-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து அழைப்பதாக கூறியுள்ளனர்.

அவர்களிடம் பேசிய தயாநிதி மாறனின் மனைவி, இது குறித்து தனது கணவரிடம் பேசி கொள்ளுமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு மூன்று முறை தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருந்திருக்கிறது.

அதன் பின்னர் திடீரென வங்கிக் கணக்கில் இருந்து ஒரே பரிவர்த்தனையில் ஒரு லட்ச ரூபாய் பணமும் எடுக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான ஓடிபியையும் பகிராமல் ரூ.99,999 பணம் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டுவிட்டதாக தெரிவித்த தாயநிதி மாறன், இம்மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com