சென்னை: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி முதலீட்டு மோசடி - சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

சென்னையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி முதலீட்டு மோசடி... பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடும் நபர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்... பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
cyber crime
cyber crimept desk

செய்தியாளர்: ஆனந்தன்

மோசடி செய்பவர்கள், மோசடி வணிகத் திட்டங்கள், ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் அல்லது பொருட்கள் வர்த்தகத் திட்டங்கள் போன்ற போலி முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குகின்றனர். அவர்கள் அதி நவீன விளம்பரப்படுத்தும் யுக்திகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை முதலீடு செய்ய வைக்கின்றனர்.

சைபர் கிரைம்
சைபர் கிரைம்pt desk

ஆனால், வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானம் ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் அவர்கள் தங்கள் முழு முதலீட்டையும் இழக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்த மோசடி தொடர்பாக தேசிய சைபர் க்ரைம் இணையதளத்தில் சைபர் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடியில் சிக்கி, பொருளதார ரீதியாக மீள முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் உண்டு.

இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது?

IIFL செக்யூரிட்டீஸ் மற்றும் பிளாக்ராக் கேபிடல் போன்ற பிரபலமான முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளாக காட்டி, மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரை சமூக ஊடகதளங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றனர். புகழ் பெற்ற நிறுவனங்களைப் போல் காட்டிக் கொள்வதன் மூலம், அவர்கள் பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையை பெறுகின்றனர். முதலீட்டு ஆலோசனை மற்றும் வாய்ப்புகள் பகிரப்படும் சமூக ஊடகக் குழுவில் சேர பாதிக்கப்பட்டவர் அழைக்கப்படுகிறார். இது மேலும் பாதிக்கப்பட்டவரிடம் முதலீட்டு திட்டத்தின் மீதான நம்பகத் தன்மையை உருவாக்குகிறது.

cyber crime
cyber crimept desk

மோசடி செய்பவர், பாதிக்கப்பட்டவரை வர்த்தகத்திற்காக ஒரு நிறுவன DEMAT கணக்கை உருவாக்க அறிவுறுத்துகிறார். இது பாதிக்கப்பட்டவருக்கு அவர்கள் முறையான முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. DEMAT கணக்கு அமைக்கப்பட்டவுடன், மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரை பங்குகளில் முதலீடு செய்வதாக போலிக் காரணத்தை கூறி பல வங்கிக் கணக்குகளுக்கு பெரிய தொகையை மாற்றும் படி வற்புறுத்துகிறார். இருப்பினும், முறையான முதலீடுகளுக்கு நிதியைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மோசடி செய்பவர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக பணத்தை பயன்படுத்துகிறார்.

பாதிக்கப்பட்டவர் மீதான தங்களின் கட்டுப்பாட்டை பலப்படுத்த மற்றும் மோசடியை தொடர, பாதிக்கப்பட்டவர் விரும்பாத அல்லது வாங்கத் தயாராக இல்லாத பங்குகளை வாங்குவதற்கு பணத்தை மாற்றுவதாக அச்சுறுத்தவும், பங்குகளை வாங்குவதாகக் கூறப்படும் பணத்தை ஈடுகட்ட கடன்களை வழங்குவதாகவும் கூறுகின்றனர். மோசடி செய்பவர் உறுதியளித்தபடி முதலீடு செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறவோ அல்லது பங்குகளை விற்கவோ முடியவில்லை என்பதை பாதிக்கப்பட்டவர் இறுதியில் உணர்கின்றனர்.

indian money
indian moneypt desk

இதுபோன்ற மோசடிகளை எவ்வாறு தடுப்பது?

1. எந்தவொரு வாய்ப்பிலும் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டை வழங்கும் நிறுவனம் அல்லது தனிநபர் பற்றி முழுமையாக ஆராயுங்கள். அவர்களின் நற்சான்றிதழ்கள், பின்னணி மற்றும் அவை தொடர்புடைய ஒழுங்குமுறை அமைப்புகளிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

2. அதிக வருமானம் தரும் வாக்குறுதிகளில் எச்சரிக்கையாக இருங்கள். ஒரு முதலீட்டு வாய்ப்பு வழக்கத்திற்கு மாறாக அதிக வருவாயை ஆபத்து இல்லாமல் உறுதியளிக்கிறது என்றால், அது போலியாக இருக்கலாம்.

3. உணர்ச்சி அல்லது அழுத்தத்தின் அடிப்படையில் ஒருபோதும் முதலீடு செய்யாதீர்கள். ஏனெனில் மோசடி செய்பவர்கள் தனி நபர்களை விரைவான முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு அதிக அழுத்த தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். எந்தவொரு வாய்ப்பையும் கவனமாக மதிப்பீடு செய்ய உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

fraud alert
fraud alertPT

4. தனிப்பட்ட அல்லது நிதி தகவலை வழங்குவதற்கு முன் எப்போதும் சரிபார்க்கவும். ஆன்லைனிலோ அல்லது தொலைபேசியிலோ தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களை பகிரும் போது கவனமாக இருங்கள். தகவலை வழங்குவதற்கு முன், தகவலைக் கோரும் தனிநபர் அல்லது அமைப்பின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கவும்.

5. எப்போதும் நம்பகமான ஆதாரங்களை பயன்படுத்தவும். முதலீட்டு வாய்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது, புகழ்பெற்ற முதலீட்டு தளங்கள், தரகர்கள் அல்லது நிதி ஆலோசகர்கள் மூலம் முதலீடு செய்யவும். முதலீடுகளை ஊக்குவிக்கும் கோரப்படாத மின்னஞ்சல்கள். சமூக ஊடக செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும்.

cyber crime police
cyber crime policept desk

நீங்கள் இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.

- சைபர் க்ரைம் கட்டணமில்லா உதவி எண்: 1930 ஐ டயல் செய்து சம்பவத்தை புகாரளிக்கவும்

அல்லது

- www.cybercirme.gov.nd என்ற இணையதளத்தில் உங்களது புகாரை பதிவு செய்யவும்

இவ்வாறு சைபர் க்ரைம் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com