'ஆளுநருக்கு நீட் விலக்கு தீர்மானத்தை திருப்பி அனுப்புங்கள்!' - சி.வி.சண்முகம் கருத்து

'ஆளுநருக்கு நீட் விலக்கு தீர்மானத்தை திருப்பி அனுப்புங்கள்!' - சி.வி.சண்முகம் கருத்து
'ஆளுநருக்கு நீட் விலக்கு தீர்மானத்தை திருப்பி அனுப்புங்கள்!' - சி.வி.சண்முகம் கருத்து

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் நீட் விலக்கு தீர்மானத்தை அனுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ''நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைபாடு. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்பதைத்தான் எங்கள் ஆட்சியில் வலியுறுத்தியிருந்தோம்.

இப்போது ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார் என்றால் அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். ஆளுநரின் கருத்துகளை ஆராய்ந்து, குறைபாடுகள் இருந்தால் மீண்டும் தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பித்தான் ஆக வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்துவதே இதற்கு ஒரே தீர்வு'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com