“ஜெயலலிதாவைப்பற்றி பேசுவதற்கு எந்தவித யோக்கியதையும் அண்ணாமலைக்கு இல்லை”- சி.வி.சண்முகம்

பாஜக-வும் அதிமுக-வும் இணைந்து தேர்தலை எதிர்நோக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இது சமாதானமாகுமா? அல்லது வெடிக்குமா?
முன்னால் அமைச்சர் சி.வி.சண்முகம்
முன்னால் அமைச்சர் சி.வி.சண்முகம்PT

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையைப்பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று பேசுகையில், “ஆளுமைமிக்க தலைவர் ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு, இந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை.

சி வி சண்முகம்
சி வி சண்முகம்கோப்புப்படம்

சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் என குற்றவாளிகளையும்; ஏழை மக்களையும் ஏமாற்றி... பணம் மோசடி செய்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு... கட்சியில் அவர்களுக்கு பொறுப்பு வழங்கிய தரங்கெட்ட அண்ணாமலை, எங்களுடைய ஆளுமைமிக்க தலைவர் ஜெயலலிதாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக ஒரு கட்சியினுடைய தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால், அது பாஜக கட்சியின் தலைவர்தான். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அப்போது அவர் கட்சியில் இல்லை. ஏதாவது காவல் நிலையத்தில் மாமூல் வாங்கிக் கொண்டிருந்திருப்பார்.

திமுக என்ன சொல்கிறதோ அதை அண்ணாமலை செயல்படுத்துகிறார். திமுக வின் B டீமாக அண்ணாமலை செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை... ‘நாங்கள் வளர்த்துவிட்டோம்’ என்று கூறுகிறீர்கள், வளர்ந்துவிட்டால் போங்க..! உனக்குதான் அதிமுக பிடிக்கலல.. போயேன்.. உன்ன யாரு இழுத்துப் பிடிச்சா? எங்களை ஏன் பிடிச்சி தொங்கிட்டு இருக்க...! " - என மிகக்காட்டமாக பேசினார்.

இது தொடர்பான வீடியோ கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com