“மத்திய அரசு மீது வழக்கு?” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்

“மத்திய அரசு மீது வழக்கு?” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்

“மத்திய அரசு மீது வழக்கு?” - நீட் விவாதத்தில் சி.வி சண்முகம் பதில்
Published on

நீட் விலக்கு மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். 

கேள்வி நேரம் முடிந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழக அரசு அனுப்பிய 2 நீட் மசோதாக்களை 2017 ஆம் ஆண்டே திருப்பி அனுப்பிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதை ஏன் மறைத்தீர்கள். அவைக்கு மாறாக செயல்பட்டுள்ளீர்கள். இதை முன்பே சொல்லியிருந்தால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பியிருக்கலாம். தற்போதாவது மசோதாவை மீண்டும் இயற்றி தமிழக அரசால் அனுப்ப இயலுமா?  என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். 

இதற்குப் பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “நீட் விவகாரத்தில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டதாகவே தமிழக அரசுக்கு கடிதம் வந்தது. திருப்பி அனுப்பியதாக நேற்றுதான் எங்களுக்கு தகவல் தெரிந்தது. மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள் என மத்திய அரசுக்கு இதுவரை 12 கடிதங்களை தமிழக அரசு எழுதியிருக்கிறது.  ஆனால் காரணத்தை மத்திய அரசு சொல்லவில்லை. காரணம் தெரிந்தால் தான் அந்த மசோதாக்களையே திருப்பி அனுப்ப முடியுமா அல்லது மீண்டும் மசோதா நிறைவேற்ற முடியுமா என முடிவு செய்ய முடியும். நீட் விவகாரத்தில் விளக்கம் கேட்டபின் மத்திய அரசு மீது வழக்குத் தொடர்வது பற்றி முடிவு செய்யப்படும்.” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை எனவும் இதற்காக சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி விவாதிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போது நீட் விலக்கு குறித்து அழுத்தம் கொடுத்தேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com