இது நாடு கடந்த காதல்.. 3 முறைப்படி திருமணம்..!

இது நாடு கடந்த காதல்.. 3 முறைப்படி திருமணம்..!

இது நாடு கடந்த காதல்.. 3 முறைப்படி திருமணம்..!
Published on

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த வாலிபருக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்துமுறை, கிறிஸ்தவ முறை, மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடந்தது. படிக்கச் சென்ற இடத்தில் மலர்ந்த காதல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமாக நடந்தேறியது.

திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல்-தமிழரசி தம்பதியரின் மகன் எஸ்.தரணி. M.Tech படித்துள்ள இவர் சுவீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக வேலைபார்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கு எம்எஸ் படிக்க சென்றபோது, சுவீடன் நாட்டை சேர்ந்த மரினா சூசேன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

நண்பர்களாக பழகி வந்த இவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அதற்கு இரு வீட்டாரும் சம்மதமும் தெரிவித்தனர். முதலில் மணமகள் வீட்டார் விருப்பப்படி கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்தனர். பின்னர் மணமகன் தரணி வீட்டார் விருப்பப்படிஇந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன்பின் மணமகனின் விருப்பப்படி சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

பட்டு வேட்டி சட்டை அணிந்து மணமகனும், நீல நிற பட்டுப் புடவை அணிந்து மணமகளும் மணக்கோலத்தில் காட்சியளித்தனர். மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com