\
'மண்ணையே காணோம்.. வெள்ளக்காடான மெரினா பீச்' - நேரடி ரிப்போர்ட்!

'மண்ணையே காணோம்.. வெள்ளக்காடான மெரினா பீச்' - நேரடி ரிப்போர்ட்!

'மண்ணையே காணோம்.. வெள்ளக்காடான மெரினா பீச்' - நேரடி ரிப்போர்ட்!
Published on

சென்னையின் முக்கிய கடற்கரையான மெரினாவில் தண்ணீர் தேங்கி காட்சி அளிக்கிறது

நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பெரும்பான்மையான சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சென்னையின் முக்கிய கடற்கரையான மெரினாவில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடற்கரையின் மணல்பரப்புக் கூட தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மெரினா சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com