\
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை: நிரம்பிய படுக்கைகள்; காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை: நிரம்பிய படுக்கைகள்; காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை: நிரம்பிய படுக்கைகள்; காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்!
Published on

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தற்போது என்ன சூழல் நிலவுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.  

மொத்தம் ஏழு பிளாக்குகள் இருக்கிறது. இந்த 7 பிளாக்குகளில் 6 பிளாக்குகளில் கொரோனா நோயாளிகள் மட்டுமே இருக்கிறார்கள். இங்கு மொத்தமாக 1650 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த 1650 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதில்,1600 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாகவும் 50 படுக்கைகள் ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளாகவும் இருக்கின்றன. 1600 ஆக்சிஜன் படுக்கைகளும் தற்போது நிரம்பிவிட்டன. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளன.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com