\
தொடர் கன மழை - செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை

தொடர் கன மழை - செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை

தொடர் கன மழை - செம்பரம்பாக்கம் உபரி நீர் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை
Published on

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 21.30 /24 அடியாகவும், நீர்வரத்து 600 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2934 /3645மில்லியன் கன அடியாக உள்ளது.

மேலும், நீர் தேவைக்காக வெளியேற்றம் 149 கன அடியாக இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் 9 மணிக்கு மேல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணித்த பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com