8 ஆயிரம் மின்கம்பங்கள் தயார்... நிவர் புயல் பயணிக்கும் பாதையில் கடலூர்.. நிலைமை என்ன?
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
கடலூரில் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் கடலூரில் மாவட்ட நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலால் ஏற்படும் மின் சேதங்களை சரிசெய்ய 3054 மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.கிட்டத்தட்ட 8ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் கடலூரில் என்ன நிலைமை இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த வீடியோ..

