தமிழ்நாடு
ஜனவரி 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
ஜனவரி 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் தளர்வுகள் 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், உலக அளவில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள உருமாறிய கொரோனாவை கருத்தில் கொண்டு கண்காணிப்பு , கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நவம்பர் 25ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 31ம் தேதி வரை பின்பற்ற வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.