சுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி

சுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி
சுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி

சுனாமி, தானே, வர்தா புயலின் போது துரிதமாக செயல்பட்ட ஐஏஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தற்போது ‘கஜா’ புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் சென்னைக்கு கிழக்கே 430 கி.மீ தொலைவிலும் நாகை வடகிழக்கே 510 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது நாளை கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் இன்று நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கஜா’ புயலினால் கடலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 6 கடலோர மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையில் இன்று உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. 
பின்னர், சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, கடலூர் துறைமுகப் பகுதிகளில் ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2,3 நாட்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் காற்று வேகமாக வீசினால் மின்கம்பங்கள் சாயலாம் என்பதால் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளுங்கள் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

‘கஜா’ புயலை எதிர்கொள்ள பொதுப்பணித்துறை மூலமாக ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் மாவட்டத்தில் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்ட பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி சுனாமியின்போது துரிதமாக செயல்பட்டு பல்வேறு சேதங்களில் இருந்து மக்களை காப்பாற்றிய பெருமைக்குறியவர். தானே புயலின்போதும் இரவும் பகலும் கடலூரில் முகாமிட்டு மீட்பு பணிகளை செவ்வன செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் ககன்தீப் சிங் பேடி. 

சுனாமியின்போது கடலூர் கலெக்டராக இவர் செய்த சேவையை பாராட்டி சிறப்பு பேரிடர் குழு நிர்வாகியாக பதவி உயர்வு அளித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. சீக்கியரான ககன் தீப்சிங் பேடி தமிழில் நன்றாக பேசும் திறமையுடைவர். சுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ புயலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com