
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஜெய் சங்கர் ஆகிய இளைஞர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
மது போதையில் தள்ளாடியபடி இருந்த இளைஞர்கள், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை குறிப்பிட்டு அவர்கள் பேசினர். தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, இளைஞர்கள் 2 பேரையும் காவல்துறையினர் குண்டு கட்டாக ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையம் கொண்டு சென்றனர்.