ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்

ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்

ஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்
Published on

ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளான இளைஞர் கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் சரணடைந்தார்.

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாணவி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மாணவி உயிரிழந்த செய்தியை அறிந்த அவரது உறவினர் விக்னேஷ் என்பவரும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், தற்கொலைக்கு காரணமான பிரேம்குமாரை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிரேம்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். அவரைக் கைது செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com