கடலூர்: வயல்வெளியில் டிராக்டருக்கு முன்னால் நின்றிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

கடலூர்: வயல்வெளியில் டிராக்டருக்கு முன்னால் நின்றிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

கடலூர்: வயல்வெளியில் டிராக்டருக்கு முன்னால் நின்றிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

விருத்தாசலம் அருகே டிராக்டர் ஏறி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், தந்தை உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், ஆலடி அடுத்த மோகாம்பரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் திவாகரன் (7;). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தமிழ்ச்செல்வனின் சகோதரர் ராமமூர்த்தியில் நிலத்தில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது.

இதையடுத்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வயலில் டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்தது, அப்போது டிராக்டரின் முன்புறம் சிறுவன் திவாகரன் நின்று கொண்டிருந்தார். இதை கவனிக்காத தமிழ்ச்செல்வனின் சகோரர் இருளக்குறிச்சி முத்து என்பவரின் மகன் மணிகண்டன் (15); டிராக்டரை இயக்கி உள்ளார்.

அப்போது, எதிர்பாதராத விதமாக டிராக்டர் டயர் திவாகரன் தலையில் ஏறியது. இதில், சிறுவன் திவாகரன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் சிறுவனின் சடலத்தை தகனம் செய்தனர்.

இதுகுறித்து வி.ஏ.ஓ சிதரம்பர பாரதி அளித்த புகாரின் பேரில், மணிகண்டன், தமிழ்ச்செல்வன், உறவினர் சேகர் உள்ளிட்ட மூவர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com