கடலூர் | கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - இருவர் பலி
செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் பகுதியில் சென்னையில் இருந்து பழனி முருகன் கோயிலுக்குச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சென்னை பாடியைச் சேர்ந்த சபரிநாத் (36), பள்ளிக்கரையைச் சேர்ந்த பிரபாகரன் (36) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்த இருவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வேப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுததியுள்ளது.