மூன்று சிறுவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்த சோகம்
மூன்று சிறுவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்த சோகம்pt desk

கடலூர் | ஓடையில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்த சோகம்

காட்டுமன்னார்கோவில் அருகே ஓடையில் முழ்கி மூன்று பள்ளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்த உபயத்துல்லா (8), முகமது அபில் (10), முகமது பாசிக் (13) ஆகிய மூன்று சிறுவர்களும் நேற்று அருகே உள்ள வெள்ளையங்கால் ஓடையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் அடுத்தடுத்து மூன்று சிறுவர்களுக்கும் தண்ணீரில முழுகியுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தண்ணீரில் இறங்கி தேடினர். தகவல் அறிந்து அங்கு வந்த காட்டுமன்னார்கோவில் காவல் துறையினர், தீயணைப்பு மீட்பு படையினருடன் இணைந்து பொதுமக்கள் உதவியுடன் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் தீவிர தேடுதலுக்கு பின் சிறுவன் உபயதுல்லா உடலை மீட்டனர்.

மூன்று சிறுவர்கள் நீரில் முழ்கி உயிரிழந்த சோகம்
ஈரோடு | 17 வயது கல்லூரி மாணவன் ஓட்டிய கார் மோதிய விபத்து - பெண் பலி

இதைத் தொடர்ந்து அடுத்து அடுத்து இரண்டு சிறுவர்கள் உடலையும் மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட மூன்று சிறுவர்களின் உடலும் உடற்கூறாய்வுக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com