கடலூரில் மட்டும் விதிகளை மீறியதாக 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு
கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக சுமார் 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என காவல்துறையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலை விபத்துகளைக் குறைக்க மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவிகித விபத்துகள் குறைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 மாதங்களில் மட்டும் கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 3 லட்சத்து 19 ஆயிரத்து 11 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 2 லட்சத்து 15ஆயிரத்து 558 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.