கடலூர்: பேருந்து நிலையத்தில் பள்ளி செல்வதற்காக காத்திருந்த மாணவன் குத்திக் கொலை

கடலூர் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே புளியமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜீவா.. இவர் விருத்தாச்சலம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

ஜீவா பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த சமயம் அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆனந்தன் தன்னிடம் இருந்த கத்தியைக்கொண்டு ஜீவாவை ஆத்திரத்தில் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் அங்கேயே ஜீவா சரிந்து விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com